விபின் ராவத் மறைவு: தலைவர்கள் இரங்கல்

DIN 9th December 2021 05:51 AM

 

முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா, ராணுவ அதிகாரிகள் ஆகியோரின் அகால மரணம் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிக்கிறது. துணிச்சல் மிக்க புதல்வர்களில் ஒருவரான விபின் ராவத்தை இந்தத் தேசம் இழந்துவிட்டது. இந்தியாவுக்காக அவர் ஆற்றிய 40 ஆண்டுகால சேவை, வீரத்துக்கும் தீரத்துக்கும் உதாரணம்.

 

ஹெலிகாப்டர் விபத்தில் விபின் ராவத், அவருடைய மனைவி, ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும்  பொறுப்புணர்வுடன் பணியாற்றியவர்கள். விபின் ராவத் உண்மையான தேச பக்தர்; ராணுவப் படைகளை நவீனப்படுத்துவதில் பெரும் பங்காற்றியவர். பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்கள் உள்பட ராணுவத்தின் நலனுக்காகப் பாடுபட்டவர். அவருடைய சேவையை இந்திய தேசம் ஒருபோதும் மறக்காது.

 

விபின் ராவத் உள்ளிட்டோர் உயிரிழந்தது ஆழ்ந்த துயரம் அளிக்கிறது. விபின் ராவத்தின் அகால மரணம், நமது ஆயுதப் படைகளுக்கும் நமது தேசத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தையும் அவர் தயாரித்து வைத்திருந்தார். 

 

முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ராணுவத்தை நவீனமயமாக்குவதில் அவரது தலைமைப் பண்பு, அனுபவம், புதுவித யோசனைகள் பெரிதும் உதவியாக இருந்தன. அவரின் மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. 

 

முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா, 11 ராணுவ அதிகாரிகள் விபத்தில் இறந்த செய்தியை அறிந்து மிகுந்த துயரமும் வேதனையும் அடைந்தேன்.  ஈடு செய்ய முடியாத இந்த பேரிழப்பு காரணமாக ஏற்பட்ட துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். பலியானோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.