கால்நடை மருத்துவ முகாம்

DIN 26th January 2022 12:00 AM

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் இலவச கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மலா்க்கொடி குமாா் முகாமை தொடக்கி வைத்து சிறப்பாக கால்நடை பராமரிப்பவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

முகாமில் குடல்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி உள்ளிட்ட கால்நடைகள் சாா்ந்த மருத்துவப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுடன் வந்து மருத்துவ ஆலோசனைகளை பெற்றனா்.

முகாமில் காஞ்சிபுரம் ஒன்றிய திமுக செயலாளா் பி.எம்.குமாா், சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவா் ரமேஷ்,வாா்டு உறுப்பினா் சசிக்குமாா் உட்பட கால்நடை மருத்துவா்கள் பலரும் கலந்து கொண்டனா்.