11-ஆவது மக்களவை தேர்தல் (1996)

11-ஆவது மக்களவை தேர்தல் (1996)

நாட்டின் 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 543 மக்களவைப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இத்தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் 59.25 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நாடு முழுவதும் 7,67,462 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.

543 இடங்களுக்கு 209 கட்சிகளின் வேட்பாளர்கள், 10,636 சுயேச்சைகள் உள்பட 13,952 பேர் போட்டியிட்டனர்.

1996-ஆம் ஆண்டு, ஏப்ரல், 27-ஆம் தேதி, மே மாதம், 2 மற்றும் 7-ஆம் தேதி ஆகிய 3 நாள்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 57.94 சதவீத வாக்குகள் பதிவாகின (முந்தைய தேர்தலைவிட 2.06 சதவீதம் அதிகம்).

இத்தேர்தலில் 423 தொகுதிகளில் இருந்து பொது பிரதிநிதிகளும் 79 தொகுதிகளில் இருந்து பட்டியலின பிரிவைச் சேர்ந்த பிரதிநிதிகளும் 41 தொகுதிகளில் இருந்து பழங்குடியின பிரிவைச் சேர்ந்த பிரதிநிதிகளும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தலில் போட்டியிட்ட 599 பெண் வேட்பாளர்களில் 40 பேர் வெற்றி பெற்றனர். இதில் 16 பேர் காங்கிரஸையும் 14 பேர் பாஜகவையும் சேர்ந்தவர்கள்.

பாஜக 161 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 140 இடங்களிலும் ஜனதா தளம் 46 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 32 இடங்களிலும் தமிழ் மாநில காங்கிரஸ் 20 இடங்களிலும் சமாஜவாதி கட்சி, திமுக தலா 17 இடங்களிலும் சுயேச்சைகள் 9 இடங்களிலும் வென்றன.

இத்தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமான இடங்களைக் கைப்பற்றிய பாஜக சார்பில் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். பெரும்பான்மைக்குப் போதிய ஆதரவு திரட்ட இயலாததால் 2 வாரங்களில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்து, ஜனதா தளத்தின் எச்.டி.தேவெ கெளடா பிரதமரானார்.

இத்தேர்தல் ரூ.597.34 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டது. பிரதி வாக்காளருக்கான செலவு ரூ.10 ஆகும்.

மக்களவைத் தேர்தல்களில் அதிகபட்சமாக 13,952 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டனர். ஒரு தொகுதிக்கு சராசரியாக 25 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மாநிலங்களில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தின் 85 இடங்களுக்கு 3,297 பேர் போட்டியிட்டனர்.

தொகுப்பு: மா.பிரவின்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com