தொகுதிகள் 3; வேட்பாளர்கள் 37; கோடீஸ்வரர்கள் 10!

தொகுதிகள் 3; வேட்பாளர்கள் 37; கோடீஸ்வரர்கள் 10!

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் 37 வேட்பாளர்களில் 10 பேர் கோடீஸ்வரர்கள்.

42 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக ஏப். 19-ஆம் தேதி ஜல்பைகுரி (தனி), கூச்பிகார் (தனி), அலிபுர்துவார் (பழங்குடியினர் தொகுதி) ஆகிய மூன்று தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 37 பேர் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து விவர பட்டியல் மூலம் இவர்களில் 10 பேர் கோடீஸ்வரர்கள் என்கிற விவரம் தெரியவந்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

அதன்படி, சுயேச்சைகள் மூவர், பாஜக, திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த தலா இருவர், மார்க்சிஸ்ட், காங்கிரஸ், ஆர்எஸ்பி ஆகியவற்றை சேர்ந்த தலா ஒருவர் வீதம் 10 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் ஆவர்.

ஜல்பைகுரியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் தேவ்ராஜ் பர்மன் ரூ.3.89 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார்.

வேட்பாளர்களில் 5 பேர் மீது குற்ற வழக்குகளும், அவர்களில் நான்கு பேர் மீது தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன.

16 வேட்பாளர்கள் 8-12 வகுப்பு வரை படித்துள்ளனர். 20 பேர் பட்டதாரிகள். ஒருவர் எழுதப் படிக்கத் தெரியாதவர் எனத் தெரிவித்துள்ளார். 21 வேட்பாளர்கள் 25-50 வயதுக்குட்பட்டவர்கள். 15 பேர் 51-70 வயதுக்குட்பட்டவர்கள். ஒருவர் 71 வயதுக்காரர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com