வாக்கு சேகரிக்க வர வேண்டாம்: கிராம மக்கள் நூதன எதிர்ப்பு

வாக்கு சேகரிக்க வர வேண்டாம்: கிராம மக்கள் நூதன எதிர்ப்பு

திருப்பத்தூர் அருகே அடிப்படை வசதிகள் இல்லாததால் அரசியல் கட்சியினர் வாக்குசேகரிக்க வரவேண்டாம் என மலை கிராம மக்கள் பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் புங்கம்பட்டு நாடு, புதூர்நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய 3 ஊராட்சிகளில் தகரகும்பம், நடுவூர்,பெரும்பள்ளி, கம்புக்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.

இந்த கிராமங்களில் சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூட்டம் நடத்தி முடிவு செய்துள்ளனர்.

மேலும் தங்கள் கிராமத்துக்கு எந்தவொரு அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்க வரவேண்டாம் என பதாகைகளை புதூர்நாடு,

புங்கம்பட்டு நாடு உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் வைத்துள்ளனர்.

மேலும் அந்த பதாகைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com