எனது பார்வையில் 2024- பழ. கருப்பையா

எனது பார்வையில் 2024- பழ. கருப்பையா

இந்தத் தேர்தல் ஒருவகையில் வேறுபட்ட தேர்தல்! ஆனால் திமுக கூட்டணி வழக்கம் போன்றதுதான்!

திமுக கூட்டணியில் எட்டுக்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தாலும், அவையெல்லாம் பெருங்காயம் இருந்த பழைய டப்பாக்கள்! அரை விழுக்காடு ஒரு விழுக்காடு வாக்கு வங்கிகள்தாம்!

ஐந்து விழுக்காடு வாக்காவது வைத்திருப்பது காங்கிரசுதான்! காங்கிரசை திமுகவுக்குப் பிடிப்பதற்கு மிகப்பெரிய காரணம் பா.ச.க.வைப் போல மாற்றுக் கட்சியாகின்ற முயற்சியைக் கனவில்கூட இந்தக் கட்சி மேற்கொள்வதில்லை. அவ்வளவு நம்பகமான கட்சி!

மற்றபடி திமுகவின் வெற்றி மோடியைச் சார்ந்ததுதான்! மோடியால் திமுகவின் பக்கம் தள்ளிவிடப்பட்ட இசுலாமிய- கிறித்துவ சமூகங்கள்தான் திமுகவின் உண்மையான பெரிய கூட்டணி! வெற்றி குறித்து திமுக நம்பிக்கை கொள்ள முடிவதற்குக் காரணமே, கட்டாயக் கூட்டணியான சிறுபான்மையினர் வாக்கு வங்கிதான்!

எடப்பாடி எடுத்த தொலைநோக்குடைய மிகச் சிறந்த அரசியல் முடிவு என்பதே பா.ச.க. உறவை முறித்ததுதான்! அதற்குப் பிறகு அவருக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! தலாக் என்பது தலாக்தான்; மாற்றமில்லை என்று அடித்துச் சொல்லிவிட்டார் எடப்பாடி. அந்தக் கூட்டணியை முறித்த எடப்பாடியின் அரசியல் முடிவின் ஆழம் எளிய கண்களுக்குத் தெரியாது!

இவ்வளவு தேர்ந்த எடப்பாடி ஒரு முக்கிய உண்மையைப் பார்க்கத் தவறுகிறார்! இந்தத் தேர்தல் திமுக-அதிமுக இடையேயானது இல்லை! மோடி வேண்டுமா வேண்டாமா என்பது குறித்தது! அது குறித்துத் தமிழ்நாட்டு மக்களை முடிவெடுக்க வைப்பது!

திமுகவின் குறி இலக்கை நோக்கி இருக்கிறது! அதிமுகவின் குறியோ திமுகவை நோக்கி இருக்கிறது! திமுக எல்லா இடங்களிலும் தோற்றாலும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆட்சியிலேதான் இருக்கும்!

வெட்டியாக மூச்சை இறைத்துப் பயனில்லை. இப்போது மோடி வேண்டாமென்கிறவர்களை ஒட்டு மொத்தமாக திமுகவுக்கு வாக்களிக்கச் செய்துவிடும் அதிமுகவின் இந்தத் தேர்தல் உத்தி தோல்வியைக் கைகூப்பி அழைப்பதாகும்!

மோடிக்கு எதிரான வாக்குகளை அதிமுக பெறாது என்றால் பா.ச.க. கூட்டணியை முறித்திருக்கவே தேவை இல்லையே!

இப்போதும் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுகவே இருக்கும் என்றாலும், அக்கட்சி 10 இடங்களில் வெல்லும் என்றாலும் அவற்றால் பயனென்ன?

புலி வேட்டைக்குப் போய்விட்டு நரி வேட்டையாடக் கூடாது! நரி வேட்டைக்கு நாள் இருக்கிறது!

சீமானின் கட்சி ஒரு அரசியல் கட்சியே இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com