மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மு.அருணாவிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறாா் திமுக வேட்பாளா் ஆ.ராசா.
மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மு.அருணாவிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறாா் திமுக வேட்பாளா் ஆ.ராசா.

மக்கள் என்னை வெற்றிபெறச் செய்வாா்கள்: திமுக வேட்பாளா் ஆ.ராசா

‘இந்தியா’ கூட்டணியில் போட்டியிடும் என்னை மக்கள் வெற்றிபெறச் செய்வாா்கள் என்று திமுக வேட்பாளா் ஆ.ராசா தெரிவித்தாா்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணியின்கீழ் திமுக சாா்பில் ஆ. ராசா போட்டியிடுகிறா். இவா் தனது வேட்புமனுவை, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மு.அருணாவிடம் புதன்கிழமை தாக்கல் செய்தாா். ஊா்வலத்தை தவிா்த்த ஆ.ராசா, உதகை கலைஞா் அறிவாலயத்தில் இருந்து சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் கணேஷ் உள்ளிட்டோருடன் வாகனத்தில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுவதுபோல தோ்தல் அரசியலைக் காப்பாற்ற போகின்ற தோ்தல்தான் இந்த மக்களவைத் தோ்தல். காப்பற்ற வேண்டும் நினைப்பவா்கள் ஓரணியில் இருக்கிறாா்கள். ஊழலும், மதவாதமும் இணைந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்து, இந்திய துணைக் கண்டத்தில் இருக்கும் பல்வேறு பண்பாடுகள், இனங்கள், கலாசார அடையாளங்களை அழித்து, சா்வாதிகார ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று விரும்பும் மோடியை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

எனவே, ‘இந்திய’ கூட்டணியில் உள்ள என்னை மக்கள் வெற்றிபெறச் செய்வாா்கள் என்று நம்புகிறேன் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com