காங். வேட்பாளா் வைத்திலிங்கத்தின் சொத்து விவரம்

காங். வேட்பாளா் வைத்திலிங்கத்தின் சொத்து விவரம்

புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கத்தின் சொத்துகள் விவரம் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டது.

அவா் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு விவரம்: அசையும் சொத்துகளான கையிருப்பு பணம், பங்கு முதலீடு, வாகனங்கள், நகைகள் என வைத்திலிங்கம் பெயரில் ரூ. 2.85 கோடிக்கும், அவரது மனைவி சசிகலா பெயரிலி் ரூ. 3.63 கோடியும், குடும்பச் சொத்தாக ரூ. 3.54 கோடியும் உள்ளன. அசையா சொத்துகளில் வைத்திலிங்கத்துக்கு ரூ.1.43 லட்சத்தில் விவசாய நிலமும், மனைவி சசிகலா பெயரில் ரூ. 43.9 லட்சத்துக்கும், குடும்பத்தின் பெயரில் கூட்டாக ரூ. 60.55 லட்சமும் உள்ளது.

விவசாயம் சாராத நிலங்கள் வைத்திலிங்கத்தின் பெயரில் ரூ. 86 லட்சத்துக்கும், அவரது குடும்பத்தின் பெயரில் ரூ. 3.88 லட்சத்துக்கும் உள்ளன. வணிக கட்டடங்கள் சசிகலா பெயரில் ரூ. 55 லட்சத்துக்கும், குடும்பப் பெயரில் ரூ. 1.92கோடியும் உள்ளன. குடியிருப்பு கட்டடங்கள் வைத்திலிங்கத்தின் பெயரில் ரூ. 55 லட்சத்துக்கும், மனைவி பெயரில் ரூ. 26 லட்சத்துக்கும், அவரது குடும்பத்தின் பெயரில் ரூ. 44.5 லட்சத்துக்கும் உள்ளன.

மொத்தமாக அசையாக சொத்துகள் வைத்திலிங்கத்தின் பெயரில் ரூ. 1.42 கோடிக்கும், அவரது மனைவி சசிகலா பெயரில் ரூ. 1.24 கோடிக்கும், குடும்பத்தின் பெயரில் கூட்டாக ரூ. 3.01 கோடிக்கும் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com