அஞ்சல் வாக்குகள் யாரெல்லாம் செலுத்தலாம்?
அஞ்சல் வாக்குகள் யாரெல்லாம் செலுத்தலாம்?

அஞ்சல் வாக்குகள் யாரெல்லாம் செலுத்தலாம்?

தேர்தல் சட்டத்தின்படி, தேர்தலில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும், தங்களுக்கென ஏற்படுத்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு நேரில் வந்தோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வாக்களிக்கலாம்.

தேர்தல் சட்டத்தின்படி, தேர்தலில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும், தங்களுக்கென ஏற்படுத்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு நேரில் வந்தோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வாக்களிக்கலாம்.

அந்த வகையில், கீழ்க்காணும் பிரிவுகளில் ஒரு வாக்காளர் தனது வாக்கினை அஞ்சல் முறையில் வாக்களிக்க வகை செய்கிறது.

அதன்படி. 
1. ராணுவப் பணியில் உள்ள வாக்காளர்கள், பிரதிநிதி மூலமாக வாக்களிக்க விரும்புவோர்.

2. சிறப்பு வாக்காளர்கள்.

3. மேற்காணும் இரண்டு பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் மனைவியர்.

4. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வாக்காளர்கள்.

5. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்.

6. பிரகடனப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் ஆகியோர் அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம்.

இவர்கள் தவிர்த்து, அஞ்சல் மூலம் வாக்களிப்போர் பட்டியலில் மேலும் ஒரு சில பிரிவினர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் திருத்தப்பட்ட முடிவின்படி,
1. மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேற்பட்டோர்)
2. மாற்றுத் திறனாளிகள்.
3. அறிவிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்படும் வாக்காளர்கள்.
4. கரோனா பாதிக்கப்பட்ட நபர்கள், பாதிப்புள்ளதாகக் கருதப்படுவோர் ஆகியோர் அஞ்சல் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com