மேற்கு வங்கத்தில் ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்று முடிந்த மறுதேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், ஃபால்டா தொகுதியில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் வந்ததால் தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதியில் மறுதேர்தலுக்கான தேதியை அறிவித்திருந்தது.
அதன்படி, கடந்த மே 21 ஆம் தேதி, ஃபால்டா தொகுதியில் உள்ள 285 வாக்குச் சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இந்த மறுதேர்தலில் 87 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Summary
The counting of votes for the re-election held in the Falta Assembly constituency in West Bengal began on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் 432 மேற்பார்வையாளர்கள் நியமனம்: தேர்தல் ஆணையம்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher




