10-ம் வகுப்பு/ ஐடிஐ படித்தவர்களுக்கு ரேடியோ அஸ்ட்ரோபிசிக்ஸ் துறையில் பணி

பூனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் National Centre For Radio Astrophysics என்ற வானியல் ஆராய்ச்சி மையத்தின் கீழ் ஊட்டியில் புதிதாக ஊட்டி ரேடியோ டெலஸ்கோப் நிலையம் (ORT) அமைக்கப்பட உள்ளது. ஊட்டி O
Published on
Updated on
2 min read

பூனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் National Centre For Radio Astrophysics என்ற வானியல் ஆராய்ச்சி மையத்தின் கீழ் ஊட்டியில் புதிதாக ஊட்டி ரேடியோ டெலஸ்கோப் நிலையம் (ORT) அமைக்கப்பட உள்ளது. ஊட்டி ORT மையத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கீழ்கண்ட பிரிவுக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/2012

1. பணியின் பெயர்: Tradesman-B (CIVIL)

காலியிடம்: 1 (பொது)

சம்பளம்: ரூ.5,200-20200 Grade Pay ரூ.2000

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ-ல் Civil Draftsman டிரேடில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட அனுபவம் அல்லது NCTVT சான்றிதழுடன் ஒரு வருட சிவில் பணியில் எஸ்டிமேஷன் மற்றும் சூப்பர்விஷன் பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Work Assistant (Mech)

காலியிடம்: 1 (ST)

சம்பளம்: ரூ.5,200 - 20200 Grade Pay ரூ.1800

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹைட்ராலிக் உபகரணங்களை பராமரிப்பதில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பெரிய மெக்கானிக்கல் இயந்திரங்களை பராமரிப்பதில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Work Assistant (Electrical)

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.5,200 - 20200 Grade Pay ரூ.1800

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பேனல், ஒயரிங் போன்றவற்றில் தொழிற்சாலையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Work Assistant (Civil)

காலியிடம்: 1  (ST)

சம்பளம்: ரூ.5,200 - 20200 Grade Pay ரூ.1800

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கொத்தனார் வேலையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Work Assistant (General)

காலியிடம்: 1  (OBC மாற்றுத்திறனாளிகள்)

சம்பளம்: ரூ.5,200 - 20200 Grade Pay ரூ.1800

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹாஸ்டல், ஹெஸ்ட்ஹவுஸ், ரூம் சர்வீஸ்,ஹெஸ்ட் ரிலேஷன் போன்றவற்றில் கிளீனிங் மற்றும் மெயின்டனென்ஸ் பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 41 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் மேலும் பல விவரங்கள் அறிய www.ncra.tifr.res.in/-estt என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:

Radio Astronimy Centre,

National Centre for Radio Astrophysics,

Tata Institute of Fundamental Research

Post Box No: 8, Udhagamandalam (OOTY) - 643001.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.