Enable Javscript for better performance
இளைஞர்களே அழைப்பு உங்களுக்குதான்: உளவுத்துறையில் அதிகாரி பணி- Dinamani

சுடச்சுட

    

    இளைஞர்களே அழைப்பு உங்களுக்குதான்: உளவுத்துறையில் அதிகாரி பணி

    By வெங்கடேசன். ஆர்  |   Published on : 23rd August 2017 12:01 PM  |   அ+அ அ-   |    |  

    givtindia


    மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் நிரப்பப்பட உள்ள 1430 உதவி மத்திய உளவுத்துறை அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மொத்த காலியிடங்கள்: 1430

    பணி: Assistant Central Intelligence Officer (ACIO)

    தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

    வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

    தேர்ந்தெடுக்கப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

    தேர்வுக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை: www.mha.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2017

    முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.10.2017

    முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.01.2018

    எழுத்துத் தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை மட்டும் நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் தில்லி, மும்பை, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மூ, விஜயவாடா, திருவனந்தபுரம், சிம்லா, பாட்னா, ராய்ப்பூர், லக்னோ, கொல்கத்தா, பெங்களூரு, போபால், அகமதாபாத் உள்ளிட்ட 33 முக்கிய நகரங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mha.nic.in/sites/upload_files/mha/files/DetailedAdvtforACIO-II_11082017%20exam.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai