கல்பாக்க அணு மின்நிலையத்தில் காலியாக உள்ள 14 சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் பணியிடங்களுக்கு இயற்பியல், வேதியில் துறைகளில் பட்டம் மற்றும் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 14
பணி: சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் (பிரிவுகள்: ஹெல்த் பிசிக்ஸ், வேதியியல், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன்)
கல்வித்தகுதி: ஹெல்த் பிசிக்ஸ், வேதியியல் துறைகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரிகல், மெக்கானிக்கல், இண்ட்ஸ்ரூ மென்டேஷன் துறைகளில் விண்ணப்பிப்பவர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bhavini.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.11.2017.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bhavini.nic.in/writereaddata/Careers/45.pdf என்ற இணையதள அறிவிப்வை பார்த்து தெரிந்துகொள்ளவும்.