சுடச்சுட

    

    பேராசிரியர் வேலை வேண்டுமா? அழைக்கிறது தில்லி என்ஐடி!

    By ஆர்.வெங்கடேசன்  |   Published on : 07th December 2018 02:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    niit


    தில்லி என்ஐடி-ல் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    பதவி: Professors
    காலியிடங்கள்: 07
    சம்பளம்: மாதம் ரூ.1,59,100 - 2,20,200
    பணி அனுபவம்: 13 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    பதவி: Associate Professors
    காலியிடங்கள்: 12
    சம்பளம்: மாதம் ரூ.1,39,600 - 2,11,300
    பணி அனுபவம்: 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    பதவி: Assistant Professors
    காலியிடங்கள்: 04
    பணி அனுபவம்: 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    தகுதி: Computer Science, Electrical & Electronics, Electronics & Communication, Mechanical, Civil போன்ற துறையிகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் Applied Science & Humanities (English Linguistic, Physics, Chemistry, Mathematics, Environmental Sciences, Economics, Management) போன்ற துறைகளில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

    விண்ணப்பிக்கும் முறை: www.nitdelhi.ac.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
    Registrar, National Institute of Technology Delhi, Sector A-7, Institutional Area, Narela, Delhi-110040, India. 

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2018

    ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 17.12.2018

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2018/12/7/NIT-Delhi-Faculty-Recruitment-Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai