Enable Javscript for better performance
பரோடா வங்கியில் அதிகாரி  வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!- Dinamani

சுடச்சுட

    

    பரோடா வங்கியில் அதிகாரி  வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

    By ஆர்.வெங்கடேசன்  |   Published on : 22nd December 2018 05:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bank-of-baroda

    வங்கியில் பணியில் சேருவதே லட்சியமாகக் கொண்டுள்ள இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக பரோடா வங்கியில் 913 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    மொத்த காலியிடங்கள்: 913

    பதவி: Specialist Officers

    துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
    துறை: Legal  - 20
    துறை: Legal -  40 
    தகுதி: சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    வயதுவரம்பு: 25 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

    சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490
     
    துறை: Wealth Management Services - Sales - 150 
    துறை: Wealth Management Services - Operations - 01

    தகுதி: Marketing, Sales, Retail, Finance துறையில் 2 ஆண்டு முதுகலை, முதுகலை டிப்பளமோ அல்லது ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று Banking, Finance துறையில் ஒரு ஆண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 மற்றும் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

    வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.31,705 - ரூ.45,950

    துறை: Wealth Management Services - Sales - 700
    தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    துறை: Wealth Management Services - Operations - 02
    தகுதி: Marketing, Sales, Retail துறையில் 2 ஆண்டு முதுகலை, முதுகலை டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

    வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

    தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழுவிவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

    விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்டி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Detailed-Notification-Specialist-Officers-2019-2020-Legal-WMS.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2018

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai