டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழக அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழக அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடம்: 06

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பதவி: Assistant Manager,  Deputy Manager (Accounts) - 04
பதவி: Assistant Manager (Secretarial) - 02

தகுதி: CA,  ICWAI முடித்து குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 29 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் வேண்டிய முகவரி:
DEPUTY GENERAL MANAGER (CORP. HR & STRATEGY)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
NO.67, MOUNT ROAD, GUINDY
CHENNAI-600 032, TAMIL NADU

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2019 

மேலும் முழுயான விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் பெற http://www.tnpl.com/Careers/adv%20for%2026122018%20rev1.pdf அல்லது http://www.tnpl.com/careers/biodataform.pdf என்னும் லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com