விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரெப்கோ வங்கியில் உதவி மேலாளர் வேலை
Published on : 04th July 2018 02:55 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சட்டத்துறையில் பட்டம் பெற்று அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி மேலாளர் (சட்டம்)
காலியிடங்கள்: 03
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எல் (அல்லது) எல்எல்பி தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 24 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.repcobank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North Usman Road, T.Nagar, Chennai - 600 017.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.708. இதனை REPCO BANK RECRUITMENT CELL என்ற பெயருக்கு பேங்க் பே ஆர்டர் அல்லது வங்கி வரைவோலை எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://repcobank.com/uploads/career/Recruitment_for_the_post_of_Assistant_Manager-Legal.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.07.2018.