நூலக அறிவியல் பட்டதாரிகளா நீங்கள்..? வேலைக்கு அழைக்கிறது தில்லி பொது நூலகம்! 

தில்லியில் உள்ள தில்லி பொது நூலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நூலக
நூலக அறிவியல் பட்டதாரிகளா நீங்கள்..? வேலைக்கு அழைக்கிறது தில்லி பொது நூலகம்! 

தில்லியில் உள்ள தில்லி பொது நூலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நூலக அறிவியல் பாடத்தில் இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் டிப்ளமோ, சான்றிதழ் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Library & Information Officer 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று நூலக அறிவியல் பிரிவில் முதுகலை பட்டத்துடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Library & Information Assistant
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று நூலக அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் அல்லது இளங்கலை, முதுகலை பட்டத்துடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Driver
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் நூலக் அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் பாடப்பிரிவில் டிப்ளமோ, சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.150. இதனை "Secretary, Delhi Library Board" என்ற பெயருக்கு டி.டி.யாகவோ அல்லது ஐபிஓவாகவோ எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.dpl.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து டிடி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  Dy.Director(Admn), Delhi Public Library, S.P.Mukherjee Marg, Delhi - 110 006.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.06.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com