இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 85 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரிகளிடம் இருந்து
இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை


மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 85 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 85

பதவி: Project Assistant Level-II (Supervisor) 
சம்பளம்: மாதம் ரூ.25,000 + 556 (conveyance charges)
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொருளாதாரம், சமூக சேவை, கணிதம், புள்ளியியல், சமூக அறிவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பதவி: Project Assistant Level-I (Data Collector) 
சம்பளம்: மாதம் ரூ.15,000 + 556 (conveyance charges)
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொருளாதாரம், சமூக சேவை, கணிதம், புள்ளியியல், சமூக அறிவியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.clri.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு முகவரியில் 27.11.2018 மற்றும் 29.11.2018 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.clri.org/WriteReadData/Opportunity/318246716NotificationNo12-2018n.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com