மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான 1018-ஆம் ஆண்டு எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை ஸ்டாப்
மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான 1018-ஆம் ஆண்டு எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தட்டச்சு, சுருக்கெழுத்து பிரிவில் பயிற்சி பெற்றவர்களிம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Stenographer Grade ‘C’ & ‘D’ Examination

காலியிடங்கள்: பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி: பிளஸ் டூ அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஹிந்தி அல்லது ஆங்கில மொழிகளில் தட்டச்சு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். ‘கிரேடு -டி’ பணிகளுக்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும், ‘கிரேடு-சி’ பணிகளுக்கு நிமிடத்திற்கு 100 வார்த்தைகளும் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து அதை குறித்த நேரத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 1.1.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ‘கிரேடு-சி’ பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்குள் இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வுக்கு மற்றும் தட்டச்சு சுருக்கெழுத்து திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு  மதிப்பெண்களின் தரவரிசை பட்டியலின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அனைத்துப் பிரிவுவைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

வங்கி மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.11.2018

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழக விண்ணப்பதாரர்கள் www.sscsr.gov.in என்ற இணையதளத்தில் சென்று தேர்வு மையங்கள் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ளவும். 

கணினி எழுத்துத்தேர்வு நடைபெறும் தேர்வு: 6.2.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_steno2018_22102018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2018
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com