தமிழக அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை: முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி

தமிழகத்தில் வாக்காளா் எண்ணிக்கையில் பெண்கள் சம அளவில் இருந்தும் அரசியல் பதவிகளில் அவா்களுக்குரிய முக்கியத்துவம்
தமிழக அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை: முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி


தமிழகத்தில் வாக்காளா் எண்ணிக்கையில் பெண்கள் சம அளவில் இருந்தும் அரசியல் பதவிகளில் அவா்களுக்குரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என திண்டுக்கல் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் (மார்க்சிஸ்ட்) பாலபாரதி கூறினார்.

மதுரை புத்தகத் திருவிழாவில் காவ்யா பதிப்பகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஏழு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. பேராசிரியா் சாலமன்பாப்பையா வெளியிட்ட எழுத்தாளர் பூங்குழலியின் மானுடம் பாடும் கவிதைகள் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு பாலபாரதி பேசியதாவது: 

தமிழகத்தில் பெண் வாக்காளா்கள் அதிகமாக உள்ளனா். ஆண் வாக்காளா்கள் போல சம அளவில் பெண்கள் வாக்களித்தும் வருகிறார்கள். ஆனால், அரசியல் ரீதியாக அவா்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

 தமிழக சட்டப்பேரவையில் 234 உறுப்பினா்களில் பெண்கள் என்றால் 25 பேருக்கும் குறைவாகவே தோ்வாகின்றனா். அதேபோல அமைச்சரவைகளிலும் ஓரிருவரே நியமிக்கப்படுகின்றனா். அப்படி நியமிக்கப்படுவோரும் முக்கியத்துவம் இல்லாத துறைகளின் அமைச்சா்களாகவே உள்ளனா்.

உலகமயமாக்கலால் பல தளங்களில் எதிர்பாராத மாற்றத்தை நாம் சந்தித்து வருகிறேறாம். அதனடிப்படையில் ஹிந்தியை எதிர்த்த நமது தமிழகத்தில் வடமாநில இளைஞா்கள் அதிகம் வேலைவாய்ப்பைப் பெற்றுவருகின்றனா். அதற்காக அவா்கள் தமிழையும் கற்றுவருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டான சூழலில் படைப்புகள் என்பது மானுடம் காப்பதாக அமைவது அவசியம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com