பொறியியல், ஐடி, சட்டம் முடித்தவர்களுக்கு இந்திய கப்பல் படையில் வேலை

பொறியியல், ஐடி, சட்டம் முடித்தவர்களுக்கு இந்திய கப்பல் படையில் வேலை

இந்தியாவின் பாதுகாப்பு துறையின் கப்பல் படையில் சார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையில் காலியாக உள்ள 37 பணியிடங்களுக்கான அறிவிப்பு


இந்தியாவின் பாதுகாப்பு துறையின் கப்பல் படையில் சார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையில் காலியாக உள்ள 37 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் காலியிடங்கள்: 37 
1. SSC (Logistics)  - 20
2. SSC ( IT) - 15
3. SSC (Law) - 02 
வயது வரம்பு:  லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஐ.டி பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 02.07.1994 - 01.01.2000 க்குள் பிறந்தவர்களும், சட்டப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 02.07.1992 -  01.07.1997க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., எம்.பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.எஸ்சி.,(ஐ.டி.,)யுடன் நிதியியல், லாஜிஸ்டிக்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், மெட்டீரியல் மேனேஜ்மெண்ட் பிரிவு ஏதாவது ஒன்றில் டிப்ளமோ முடித்தவர்கள், எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,) பி.ஆர்க்., போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக்., போன்ற ஏதாவதொன்றில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., பி.எஸ்சி., ஐ.டி., எம்.எஸ்சி., ஐ.டி, எம்.டெக்., பி.சி.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சட்டப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 55 சதவீத மதிப்பெண்களுடன் சட்ட படிப்பு முடித்துவிட்டு வழக்கறிஞர் சட்டம் 1961 கீழ் வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்பி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரகங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_23_1819b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.10.2018 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com