பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... சிண்டிகேட் வங்கியில் அதிகாரி வேலை
By | Published On : 01st April 2019 03:51 PM | Last Updated : 01st April 2019 03:51 PM | அ+அ அ- |

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் 129 சிறப்பு அதிகாரி தரத்திலான மூத்த மேலாளர், மேலாளர், செக்யூரிட்டி அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியாவர்களிடம் இருந்து விண்ணபபங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 129
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Senior Manager (Risk Management) - 05
சம்பளம்: மாதம் ரூ. 42,020 - 51,490
பணி: Manager (Risk Management) - 50
பணி: Manager - (Law) 41
பணி: Manager (IS Audit) - 03
பணி: Security Officer - 30
சம்பளம்: மாதம் ரூ. 31,705 - 45,950
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் படித்தவர்கள், சட்டம் படித்தவர்கள், எம்.பி.ஏ. (பேங்கிங், நிதி), எம்.எஸ்சி., சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ. முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.02.2019 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600-ம், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.syndicatebank.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.syndicatebank.in/RecruitmentFiles/LATERAL_RECT_2019_DETAIL_ADVT_HO_HRDD_27032019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.