சுடச்சுட

  

  கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... 24-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

  By ஆர்.வெங்கடேசன்  |   Published on : 14th April 2019 09:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cochinshipyard


  கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 40 புராஜெக்ட் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து வரும் 24-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  மொத்த காலியிடங்கள்: 40
  பணி: Senior Project Officers
  காலியிடங்கள்: 06
  துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
  1. மெக்கானிக்கல் - 02
  2. எலக்ட்ரிக்கல் - 01
  3. எலக்ட்ரானிக்ஸ் - 01
  4. சிவில் - 02

  வயதுவரம்பு: 24.04.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

  தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் Shipyard, Port, Heavy Engineering நிறுவனத்தில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

  பணி: Project Officers
  காலியிடங்கள்: 34

  துறைவாரியான காலிடங்கள் விவரம்:
  1. மெக்கானிக்கல் - 20
  2. எலக்ட்ரிக்கல் - 05
  3. எலக்ட்ரானிக்ஸ் - 04
  4. சிவில் - 02
  5. இன்ஸ்ருமென்டேஷன் - 01
  6. இன்பர்மேஷன் டெக்னாலஜி - 02

  வயதுவரம்பு: 24.04.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் Shipyard, Port, Heavy Engineering நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

  தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Cochin Shipyard Limited, Cochi.

  விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

  விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து சுய சான்றொப்பம் செய்த தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவு அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.  

  விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chief General Manager (HR & Training), Cochin Shipyard Ltd., Perumanoor P.O., Kochi - 682 015.

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.cochinshipyard.com/career/Vacancy%20notification-PO.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.04.2019

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai