சுடச்சுட

  

  இந்திய அணுசக்தி கழக நிறுவனத்தில் டிரெய்னி பணி: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

  Published on : 16th April 2019 12:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  npcil


  மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  பணி: Executive Trainee

  காலியிடங்கள்: 200

  வயதுவரம்பு: 23.04.2019 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ருமென்டேஷன் போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக், பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும்.

  தேர்வு செய்யப்படும் முறை: 2017,2018, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற GATE நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  உதவித்தொகை: பயிற்சின்போது  உதவித்தொகையாக மாதம் ரூ.35,000 வழங்கப்படும். 

  விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

  விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://npcilcareers.co.in/ETHQ2019/candidate/default.aspx என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2019

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai