இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வேலை: வாய்ப்பு யாருக்கு?

மகாராஷ்டிர மாநிலம் பூனேயில் செயல்பட்டு வரும் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (Indian Institute of Tropical Meteorology) ஒப்பந்த கால அடிப்படையில்
இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வேலை: வாய்ப்பு யாருக்கு?


மகாராஷ்டிர மாநிலம் பூனேயில் செயல்பட்டு வரும் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (Indian Institute of Tropical Meteorology) ஒப்பந்த கால அடிப்படையில் Research Associate மற்றும் Research Fellow பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 30

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: IITM Research Associates 

காலியிடங்கள்: 10 

வயதுவரம்பு: 15.05.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஓபிசி மாற்றுத்திறனாளிகளுக்கு 12 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: Physics, Applied Physics, Atmospheric Sciences, Meteorology,  Oceanography, Climate Science, Geophysics with Meteorology, Environmental Sciences, Electronic,  Chemical Sciences, Chemistry, Physical Chemistry.  Inorganic Chemistry, Organic Chemistry, Mathematics, Applied Mathematics, statistics போன்ற ஏதாவதொன்றில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ. 47,000 + வீட்டு வாடகை படி


பணி: IITM Research Fellows

காலியிடங்கள்: 20

வயதுவரம்பு: 15.05.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஓபிசி மாற்றுத்திறனாளிகளுக்கு 12 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் Meteorology, Atmospheric Sciences, Oceanography, Physics, Applied Physics, Geophysics, Mathematics, Applied Mathematics, Statistics போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று, நெட், கேட் போன்ற ஏதாவதொரு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

உதவித்தொகை: மாதம் ரூ.31,000 + வீட்டு வாடகை படி

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புக்கான https://www.tropmet.res.in/jobs_pdf/1555419046advtPER-05-2019.pdf  லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 22.04.2019 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com