Enable Javscript for better performance
கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!- Dinamani

சுடச்சுட

    

    கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

    Published on : 22nd April 2019 01:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cochinshipyard


    கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Draftsman Trainees பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    மொத்த காலியிடங்கள்: 50

    பணி: Ship Draftsman Trainee(Mechanical)
    காலியிடங்கள்: 29

    பணி: Ship Draftsman Trainee (Electrical)
    காலியிடங்கள்: 21

    வயதுவரம்பு: 02.05.2019 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

    தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருப்பதுடன் CAD தெரிந்திருக்க வேண்டும்.

    உதவித்தொகை: மாதம் ரூ.10,500 வழங்கப்படும். 

    தேர்வு செய்யப்படும் முறை: செய்முறைத்தேர்வு, ஆன்லைன் எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு கொச்சியில் நடைபெறும்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

    விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cochinshipyard.com  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2019

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai