மத்திய அரசில் ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய புவியியல் ஆய்வுத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 
மத்திய அரசில் ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் வேலை


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய புவியியல் ஆய்வுத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: இந்திய புவியியல் ஆய்வுத்துறை 

பணி: ஓட்டுநர் 

காலியிடங்கள்: 37

வயது வரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200 

பணியிடம்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கோவா 

விண்ணப்பிக்கும் முறை: https://www.gsi.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Additional Director General, Geological Survey of India, Southern Region, GSI Complex, Bandlaguda, Hyderabad - 500068 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1z76Dt3LMQFtay1D8xoUHkbE2gKVqhPXH/view என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும். https://www.gsi.gov.in என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை மே 26ம் தேதிக்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com