ஐஆர்சிடிசி-ல் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்கலாம் வாங்க...!

ஐஆர்சிடிசி என அழைக்கப்படும் இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக நிறுவனத்தில் 2 ஆண்டு ஒப்பந்தத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பிரவைசர்
ஐஆர்சிடிசி-ல் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்கலாம் வாங்க...!


ஐஆர்சிடிசி என அழைக்கப்படும் இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக நிறுவனத்தில் 2 ஆண்டு ஒப்பந்தத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பிரவைசர் (ஹாஸ்பிடாலிட்டி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Supervisor (Hospitality)

காலியிடங்கள்: 92 (UR-40, SC13, ST-06,OBC-24, EWS-09)

சம்பளம்: மாதம் ரூ.25,000 + இதர படிகள் வழங்கப்படும். 

வயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: பி.எஸ்சி (ஹாஸ்பிடாலிட்டி) அண்ட் ஓட்டல் அட்மினிஸ்ட்ரேசன் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் குறிப்பிட்ட உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஆகஸ்ட் 14,16,19,21,24

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 
இடம்: IHM/Hajipur Hajipur, National Highway 19, Hajipur, BR 844101
தேதி: 05.08.2019 மற்றும் 06.08.2019

இடம்: IHM/Gangtok Hotel Mt. Jopuno, P.S. Road, Gangtok City, Sikkim. 
தேதி: 9.08.2019 

இடம்: IHM/Guwahati Upper Hengrabari, Chachal, Barbari, Opposite Doordarshan Quarters, Guwahati - 781036,
தேதி: 01.08.2019 மற்றும் 20.09.2019 

இடம்: IHM/Shillong “Lumpyngad”Bishop Cotton Road, Meghalaya-793001
தேதி: 22.08.2019

இடம்: IHM/Kolkata P-16 Taratala Road, Kolkata700088. 
தேதி: 26.08.2019 மற்றும் 27.08.2019

விண்ணப்பிக்கும் முறை: http://www.irctc.com இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/NotificationEastzone_5.pdf அல்லது http://www.irctc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com