சுடச்சுட

  

  முதுநிலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு

  Published on : 19th August 2019 03:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  TRB


  அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் கிரேட்-1 பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

  அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் கிரேட்-1 பணியிடங்களில் புதிய நபர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

  ஜூன் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கான கடைசி நாள் ஜூலை 15 என அறிவிக்கப்பட்டது.

  அப்போது போட்டித் தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. இதன்படி போட்டித் தேர்வுக்கான தேதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.

  அதன்படி இந்தத் தேர்வுகள் செப்டம்பர் 27 முதல்  29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வுகள் முற்றிலும் கணினி வழியாக நடத்தப்படவுள்ளன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai