இஸ்ரோவில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

அனைவரும் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன்- பி, தொழில்நுட்ப உதவியாளர்
இஸ்ரோவில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!


அனைவரும் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன்- பி, தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

பணி: Technician B - 40 
1. Fitter - 20 
2. Electronic Mechanic - 15
3. Plumber - 02 
4. Welder - 01 
5. Machinist - 01

பணி: Draughtsman B - 12 
1. Draughtsman Mechanical -10 
2. Draughtsman - Electrical - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 21,700 + இதர சலுகைககள் வழங்கப்படும். 

பணி: Technical Assistant - 35
1. Mechanical - 20 
2. Electronics - 12 
3. Civil - 3 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 44,900 + இதர சலுகைககள் வழங்கப்படும். 

வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. கட்டணத்தை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திரன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு மையம்: பெங்களூரு

விண்ணப்பிக்கும் முறை: https://www.isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.isro.gov.in/sites/default/files/hsfc_advt-bilingual_final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். . 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2019 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com