2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியீடு: செப்டம்பர் 4 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் 2,340 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நேரடித் தேர்வு முறையில் நிரப்புவதற்கான அறிவிக்கையை
2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியீடு: செப்டம்பர் 4 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் 2,340 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நேரடித் தேர்வு முறையில் நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் www.trb.tn.nic.in  என்ற இணையதளம் வழியாக ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க செப்டம்பர் 24 கடைசி நாளாகும்.

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான உதவிப் பேராசிரியர் பணியிடங்களும், 20 கிரேடு-1 கல்லூரி முதல்வர் பணியிடங்கள், 30 கிரேடு-2 கல்லூரி முதல்வர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக இருந்து 
வருகின்றன. இந்த காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், தமிழ், ஆங்கிலம், கணிதம், பிபிஎம், உயிரி வேதியியல், பல்லுயிர் பெருக்கம், உயிரி தொழில்நுட்பம், தாவரவியல், வேதியியல், வணிகவியல், கணினி அறிவியல் என பல்வேறு துறைகளின் கீழ் உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.

இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். செப்டம்பர் 4 முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செப்டம்பர் 24 கடைசி நாளாகும்.

கல்வித் தகுதி என்ன?: இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, நெட் (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) அல்லது செட் (மாநில அளவிலான தகுதித் தேர்வு) தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது, முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, ஆராய்ச்சி படிப்பை (பிஎச்.டி.) முடித்திருக்க வேண்டும். இதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி, எஸ்.டி., எஸ்சிஏ, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

அல்லது, முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, ஆராய்ச்சி படிப்பை (பிஎச்.டி.) முடித்திருக்க வேண்டும். இதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி, எஸ்.டி., எஸ்சிஏ, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

நேரடித் தேர்வு: இந்த உதவிப் பேராசிரியர்கள் நிரப்பும் பணி சான்றிதழ் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் நேரடித் தேர்வு முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது, பத்தாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரையிலான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும். இவற்றுடன் பணி அனுபவச் சான்று, சாதிச் சான்று ஆகியவற்றையும் விண்ணப்பதாரர்கள்  பதிவேற்றம் செய்வது அவசியம்.

பணி அனுபவத்துக்கு ஓராண்டுக்கு 2 மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும்.  கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்  விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும். நேர்முகத் தேர்வு 10 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். அதன்படி மொத்தம் 34 மதிப்பெண்கள் அடிப்படையில், பணியாளர் தேர்வு நடைபெற உள்ளது.

 தொலைநிலை எம்.ஃபில், பிஎச்.டி. படிப்புகள் தகுதியாகாது.

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள 2,340 உதவிப் பேராசிரியர் தேர்வுக்கு தொலைநிலைக் கல்வி முறையில் முடிக்கப்பட்ட எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகள் தகுதியாகக் கருதப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஆர்பி அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

உதவிப் பேராசிரியர் நேரடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பட்டப் படிப்பு வரை 10+2+3 என்ற அடிப்படையில் மேற்கொண்டிருப்பது கட்டாயம். மேலும், தொலைநிலைக் கல்வி அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட எம்.ஃபில். அல்லது பிஎச்.டி. (ஆராய்ச்சி) படிப்புகள் தகுதியாகக் கருதப்பட மாட்டாது.

அதுபோல, பணி அனுபவத்தைப் பொருத்தவரை நேரடி பிஎச்.டி. படிப்பை மேற்கொண்ட கால கட்டத்தில் உள்ள கல்லூரி ஆசிரியர் பணி அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அதே நேரம், பகுதி நேர பிஎச்.டி. படிப்பின் போது உள்ள பணி அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விவரங்களுக்கு http://trb.tn.nic.in/arts_2019/Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com