சுடச்சுட

  

  இன்றைய வேலைவாய்ப்பு செய்தி: ரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை

  By ஆர்.வெங்கடேசன்   |   Published on : 05th February 2019 01:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jobs


  சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  மொத்த காலியிடங்கள்: 18

  பணி: அலுவலக உதவியாளர்

  வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் கோருபவர்களுக்கு நடைமுறையில் அரசு ஆணைகள் அரசு விதிமுறைகளின் படி செயல்படுத்தப்படும்.

  தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

  விண்ணப்பிக்கும் முறை: வரையறுக்கப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயாரித்து முழுமையாக பூர்த்தி செய்து அத்துடன் கல்வி, சாதி மற்றும் பிற சான்றிதழ்களின் நகலில் சுயசான்றொப்பமிட்டு தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை பதவித்தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். 

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், எழும்பூர், சென்னை - 600 008. 

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.03.2019 

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/OA%20Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai