சுடச்சுட

  

  தமிழக சுகாதாரத்துறையில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு!

  By ஆர்.வெங்கடேசன்  |   Published on : 07th February 2019 02:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mrb


  தமிழக அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 520 செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தம் மற்றும் ஒருங்கிணைந்த சம்பள அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

  பணி: செவிலியர் (Nurse) 

  காலியிடங்கள்: 520

  தகுதி: செவிலியர் துறையில் பட்டயம் அல்லது பட்டம் பெற்ற பெண்கள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் குடும்ப நலத்துறை கவுன்சில் நிரந்த பதிவு செய்திருக்க வேண்டும். 

  வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். 
  தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

  விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.350ம், மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.700 கட்டணமாக செலுத்த வேண்டும். 

  விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2019/Nurses_SNCU_Notification_06022019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2019

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai