சுடச்சுட

  

  வேலைவாய்ப்பு அவலம்: 14 துப்புரவு தொழிலாளர் பணியிடங்களுக்கு 4600 பட்டதாரிகள் விண்ணப்பம்!

  Published on : 08th February 2019 03:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jobs-fair

  இந்தியாவின் வேலை வாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமடைந்துள்ள நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு தொழிலாளர் பணியிடங்களுக்கு 4600 பேர் விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

  பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிகள்(ஜிஎஸ்டி) அமலாக்கத்துக்கு பின்னர், நாடு முழுவதும் இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களிலும், 1972 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டுகளில் வேலைவாய்ப்பு மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு தொழிலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

  14 பணியிடங்கள் கொண்ட அந்த பணிக்கு பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறைதுறை பட்டதாரிகள் மற்றும் எம்பிஏ, முதுகலை பட்டதாரிகள் என 4 ஆயிரத்து 600க்கும் அதிகமானோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன. 

  இதனிடையே, மக்களவைத் தோ்தல் முடிவுற்ற பின்னரே நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தோ்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பித்தவர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

  இந்த பணிக்கான அடிப்படை சம்பளம் அதிகமாக உள்ளதாலும், நாட்டில் நிலவி வரும் வேலை வாய்ப்பிண்மை போன்ற நிலையால் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகளும் துப்புரவு தொழிலாளர் பணியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளதாக அனைத்து தரப்பிலும் பரவலாக பேசப்படுகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai