சுடச்சுட

  

  ரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

  By ஆர்.வெங்கடேசன்  |   Published on : 08th February 2019 04:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tnpsc

   
  தமிழக அரசின் தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவை நிறுவனமான தொழில் துறை மற்றும் வர்த்தகப் பிரிவில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் வேதியியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாள்ர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. மாதம் சம்பளம் ரூ.1.19 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  மொத்த காலியிடம்: 02 

  பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

  பணி: இளநிலை வேதியியலாளர் - 01 
  சம்பளம்: மாதம் ரூ. 35,900 முதல் ரூ.1,13,500

  பணி: வேதியியலாளர் - 01 
  சம்பளம்: மாதம் ரூ. 37,700 முதல் ரூ.1,19,500

  தகுதி: வேதியியல் துறையில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

  தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

  விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில்  விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ. 150, தேர்வுக் கட்டணம் ரூ.150. ஏற்கனவே ஒரு முறை பதிவுக்கட்டணம்ரூ. 150 செலுத்தி இருப்பவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை. 
   
  மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_08_Nofifyn_Chemist_Junior_Chemist.pdf?fbclid=IwAR2xBy6YOL-WsnR6Z2xWgR2bm08IH3fExEfx-JoFZeatteazPDhtEYfyQeY என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2019 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai