சுடச்சுட

  

  பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..!

  Published on : 19th February 2019 02:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pnb

  முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 325 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  மொத்த காலியிடங்கள்: 325

  பணி: Senior Manager (Credit) MMG Scale III - 51 
  வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 
  சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490

  பணி: Manager (Credit) MMG Scale II - 26 
  வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
  சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

  பணி: Senior Manager (Law) MMG Scale III - 55 
  வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
  சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490

  பணி: Manager (Law) MMG Scale II - 55 
  வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 
  சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

  பணி: Manager (HRD) MMG Scale II - 18 
  வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
  சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

  பணி: Officer (IT) JMG Scale I - 120 
  வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 
  சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

  தகுதிகள்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. CA, ICWA, நிதியியல் துறையில் MBA அல்லது PGDM முடித்தவர்கள், சட்டத்துறையில் இளங்கலை பட்டம், மனித மேலாண்மை, தனி மேலாண்மை, பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல் மற்றும் டெக்னாலஜி, தகவல் தொடர்பியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்தவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
   
  தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

  விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

  விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 24.03.2019 அன்று நடத்தப்படலாம் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2019

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pnbindia.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai