வனத்துறை அதிகாரி பணிக்கான தேர்வு - 2019: UPSC வெளியீடு!

இந்திய வனத்துறை அதிகாரி பணிக்கான தேர்வு - 2019க்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 
வனத்துறை அதிகாரி பணிக்கான தேர்வு - 2019: UPSC வெளியீடு!


இந்திய வனத்துறை அதிகாரி பணிக்கான தேர்வு - 2019க்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

தேர்வின் பெயர்: Indian Forest Service Examination - 2019

காலியிடங்கள்: 90

வயதுபவரம்பு: 01.08.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோருபவருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology அல்லது Agriculture, Forestry போன்ற ஏதாவதொன்றைமுதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 

முதல்நிலைத் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, வேலூர்

முதன்மைத் தேர்வு சென்னையில் வைத்து நடத்தப்படும். உத்தேசமாக டிசம்பர் 2019ல் நடத்தப்படலாம். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://upsc.gov.in/sites/default/files/Final_Notice_IFoS_2019-NN.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2019
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com