சுடச்சுட

  

  வேலை... வேலை... வேலை... தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் டெக்னிக்கல் வேலை!

  By ஆர்.வெங்கடேசன்  |   Published on : 08th January 2019 03:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tnpsc


  தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் நிரப்பப்பட உள்ள முதுகலை மற்றும் இளங்கலை டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூவலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  மொத்த காலியிடங்கள்: 19

  பதவி: Senior Technical Assistant - 05

  சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,15,700

  பதவி: Junior Technical Assistant  - 14

  சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

  வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும். 

  தகுதி: ஜவுளித் தொழில்நுட்பத் துறையில் பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்கள், மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி மையம் வழங்கும் டிப்ளமோ படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

  தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  தேர்வு கட்டணம்: ரூ.150, ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.150. ஏற்கனவே, ஒரு முறை பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் தேர்வு கட்டணம் ரூ.150 மட்டும் ஆன்லன் மூலம் செலுத்தினால் போதும். 

  தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர்.

  விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 08.02.2019

  எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.04.2019

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_03_Notifyn_Senior_Junior_Tech_Asst.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.02.2109 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai