தில்லி பல்கலைக்கழத்தில் உதவியாளர் வேலை: இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

தில்லி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 73 நேர்முக உதவியாளர், சுருக்கெழுத்தர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு
தில்லி பல்கலைக்கழத்தில் உதவியாளர் வேலை: இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

தில்லி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 73 நேர்முக உதவியாளர், சுருக்கெழுத்தர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 73 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: நேர்முக உதவியாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

பணி: சுருக்கெழுத்தர் - 07
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் - 44 
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
பணி: அலுவலக உதவியாளர் (எம்டிஎஸ்) - 20 

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, ஐடிஐ மற்றும் தட்டச்சு, சுருக்கெழுத்து முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.jnu.ac.in/career என்ற இணையதள்ததின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jnu.ac.in/career  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com