சுடச்சுட

  

  விண்ணப்பித்துவிட்டீர்களா..? குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

  Published on : 13th July 2019 08:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tnpsc


  குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) கடைசி நாளாகும்.

  தமிழக அரசுத்துறைகளில் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்விற்கான அறிவிப்பையும், தேர்வையும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளா், நில அளவையர், வரித் தண்டலா், வரைவாளா், தட்டச்சா் உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கையை கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியிட்டது. 

  மேற்கண்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) கடைசி நாளாகும். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை விண்ணப்பம் செய்ய கால அவகாசம் இருப்பதால், மேலும் அதிகமானோர் விண்ணப்பம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டணத்தைச் செலுத்த ஜூலை 16 ஆம் தேதி கடைசி நாளாகும்.

  6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்கு இதுவரை 13.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். எழுத்துத் தோ்வு செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

  கடந்த முறை எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 17 லட்சமாக இருந்தது. இப்போது 13 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விண்ணப்பிக்க ஒரு நாள் அவகாசம் உள்ள நிலையில், தேர்வர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai