சுடச்சுட

    

    விண்ணப்பித்துவிட்டீர்களா..? கர்நாடகா வங்கில் வேலை... விண்ணப்பிக்க இன்றே கடைசி

    Published on : 20th July 2019 02:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bank_exam


    கர்நாடகா வங்கியில் நிரப்பப்பட உள்ள புரபஷெனரி கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 20) கடைசி நாளாகும்.

    பணி: Probationary Clerks

    சம்பளம்: மாதம் ரூ.37,000

    வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 03.08.2019

    தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, தில்லி, தர்வாத், ஹூப்ளி, மங்களூரு, மும்பை மற்றும் மைசூர்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

    விண்ணப்பிக்கும் முறை: www.karnatakabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துத்துக்கொள்ளவும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2019

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai