இலவச உயர்தொழில் நுட்பக் கல்வி! இணையம் வாயிலாக பயன் பெறுங்கள்!

ஜூலை மாதம் தொடங்க உள்ள படிப்புகளுக்கான சேர்க்கை பதிவுகள் இப்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. விண்ணப்பிக்க இறுதிநாள் (25.07.2019) 
இலவச உயர்தொழில் நுட்பக் கல்வி! இணையம் வாயிலாக பயன் பெறுங்கள்!

NPTEL ( National Programme on Technology Enhanced Learning ) என்பது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதி உதவியுடன்  I.I.T  மற்றும் I.I.M  நிறுவனங்களால் நடத்தப்படும் ஓர் அமைப்பாகும். 

இவர்கள், ஆண்டிற்கு இரண்டுமுறை (ஜனவரி முதல் ஜூன் வரை  மற்றும் ஜூலை முதல் டிசம்பர் வரை) குறுகியகால சான்றிதழ் படிப்பை இணையதளம் வழியாக இலவசமாக கற்றுத் தருகிறார்கள். இதில் சேர வயது ஒரு தடை அல்ல. சிறப்புக் கல்வித் தகுதி எதுவும் தேவை இல்லை. 

கணினி தொழில் நுட்பம், நிர்வாக மேலாண்மை, இயந்திர தொழில் நுட்பம், உளவியல் மற்றும் தனி மனித முன்னேற்றப் பயிற்சி முறைகள் என்று 235 பயனுள்ள படிப்புகள் உள்ளன. அனைத்தும் மிகச் சிறந்த வல்லுநர்களால் நடத்தப்படுகிறது. இவற்றில், தங்களுக்குத் தேவையான, விருப்பமான பாடங்களைத் தேர்வு செய்து நாம் படிக்கலாம். 

முழுமையான விபரம்  nptel.ac.in   என்ற வலைதளத்தில் உள்ளது. 

உயர் தொழில் நுட்பக் கல்வி பேராசிரியர்கள்,. காணொளி (வீடியோ) மூலம் பாடங்களை  நடத்துவார்கள். கல்வி கற்றலில் நாட்டம் உடையவர்களுக்கு இது ஓர் இனிமையான அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும். விருப்பம் இருப்பவர்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம். தேர்வு கட்டணம் ருபாய் 1000/- மட்டுமே. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் NPTEL வழங்கும் இந்திய அரசின் சான்றதழ் பெறலாம். 

ஜூலை மாதம் தொடங்க உள்ள படிப்புகளுக்கான சேர்க்கை பதிவுகள் இப்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. விண்ணப்பிக்க இறுதிநாள் (25.07.2019) 

இந்த இலவச உயர் கல்வி வாய்ப்பினை தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com