என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஐடிஐ படிப்புடன் தொழில்பழகுநர் பழகுநர் பயிற்சி பெற ஓர் அரிய வாய்ப்பு!

இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஐடிஐ படிப்புடன் தொழில்பழகுநர் பழகுநர் பயிற்சி பெற ஓர் அரிய வாய்ப்பு!


இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த NLC வேலைவாய்ப்பு அறிவிப்பு படி  Fitter fresher, Electrician fresher, Welder fresher, MLT. Pathology fresher, MLT. Radiology fresher தொழில் பழகுநர் பயிற்சிக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த நெய்வேலி NLC வேலைவாய்ப்பு அறிவிப்பு படி இந்த தொழில் பயிற்சிக்கு மொத்தம் 85 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 29.07.2019 காலை 10 மணி முதல் 07.08.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் www.nlcindia.com என்ற இணையத்தளத்திற்குள் சென்று ON LINE REGISTRATION FORM- ஐ பூர்த்தி செய்து விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பயிற்சி மற்றும் பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்: 
பணி: Fitter fresher - 20
பணி: Electrician fresher - 20

பயிற்சியின் கால அளவு: 2 ஆண்டு

பணி: Electrician fresher - 20

பயிற்சியின் காலம்: 15 மாதம்

உதவித்தொகை: முதலாம் ஆண்டும் மாதம் ரூ.8,766, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.10,019
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

பணி: MLT. Pathology fresher - 15
பணி: MLT. Radiology fresher - 10

பயிற்சியின் காலம்: 15 மாதம் 

உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,766, மூன்று மாதங்கள் ரூ.10,019 வழங்கப்படும்.

தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.06.2019 தேதியின்படி 14 வயது பூர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

பின்பு பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் தங்களது கையொப்பம் இட்டு, அதனுடன் தேவையான சான்றிதழ்கள், அதாவது மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னாள் இராணுவவீரரின் வாரிசாக அல்லது மாற்றுத்திறனாளியாக இருந்தால், அவற்றின் நகலையும் இணைத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை 12.08.2019 மாலை 5.00 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள Collection box என்ற பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  
பொதுமேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி-607803.

மேலும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். NLC வேலைவாய்ப்பு 2019 தேர்வு முறை பற்றிய விவரங்களுக்கு, NLC அதிகாரப்பூர்வ இணையதளமான www.nlcindia.com அல்லது https://www.nlcindia.com/new_website/careers/ADVERTISE-02-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பயிற்சிக்கு தேர்வுசெய்யப்பட்டவ்ரகள் பட்டியில் www.nlcindia.com இணையதளத்தில் 22.08.2019 அன்று வெளியிடப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com