தமிழக அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலை: டிஆர்பி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் பணியாளர்
தமிழக அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலை: டிஆர்பி அறிவிப்பு


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்(டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Post Graduate Assistants / Physical Education Directors Grade-I 

காலியிடங்கள்: 2144

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Tamil - 319
2. English - 223
3. Mathematics - 279
4. Physics - 210
5. Chemistry - 356
6. Botany - 154
7. Zoology - 144
8. History - 104
9. Geography - 11
10. Economics - 211
11. Commerce - 99
12. Political Science - 14
13. Physical Education - 16
14. Bio Chemistry - 01
15. Micro Biology - 01
16. Home Science - 01
17. Indian Culture - 01

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்று பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்பிடிப்பில் ஒரே பாடத்தை படித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 57 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/PG_2019/pg_2019.pdf?fbclid=IwAR0bQ5zTmMGq12j1mt1NDdTV0_GzgbmF7XNg6tomZ3ovelEavss3lbuG5DM என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் தேதி: 24.06.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com