கணினி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களா நீங்கள்... டிஆர்பி இணையதளத்தில் நுழைவுச்சீட்டு வெளியீடு

தமிழகத்தில்  வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்
கணினி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களா நீங்கள்... டிஆர்பி இணையதளத்தில் நுழைவுச்சீட்டு வெளியீடு


தமிழகத்தில்  வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள், இளநிலை கணினி அறிவியல் படிப்புடன் பி.எட். முடித்தவர்களும், தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான, கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்புடன் பி.எட்., முடித்தவர்களும் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என அண்மையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது.

இதைப் பின்பற்றி, 814 கணினி ஆசிரியர் காலியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. கடந்த மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிட்டது. இந்தப் பதவிக்கு, ஆன்லைன் வழி கணினி தேர்வு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்க தேர்வர்கள் கடந்த மார்ச் 20-ஆம் தேதி முதல், ஏப்ரல் 10-ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பித்தனர். 

இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கணினி பயிற்றுநர் நிலை 1-க்கான (முதுநிலை நிலை) கணினி வழித் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்தத் தேர்வுக்கு உரிய அனுமதிச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in)  தேர்வர்கள் பயனியர் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

தேர்வர்கள் நுழைவுச்சீட்டினை பிரதி எடுத்து ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதி ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். தேர்வு நாளான ஜூன் 23-ஆம் தேதி காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com