சுடச்சுட

  
  nitcalicut


  கேரளமாநிலம் கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் (என்.ஐ.டி.) நிரப்பப்பட உள்ள 129 தொழில்நுட்ப அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  தகுதி: ஐ.டி.ஐ., பொறியியல் துறையில் டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி. அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பணி அனுபவம் தேவை. 

  வயதுவரம்பு: 01.06.2019 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

  தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

  நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 24.06.2019 முதல் 27.06.2019 வரை நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. 

  விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதை பதிவு செய்து கொண்டு, தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் அந்தந்த பணிக்கான நேர்முகத் தேர்வு தேதியில் நேரில் கலந்துகொள்ள வேண்டும். 

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nitc.ac.in/app/webroot/img/upload/308562777.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai