வேலை... வேலை... வேலை.... பொறியியல் பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை

கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ‘யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம் (யூ.இ.எஸ்.)’,
வேலை... வேலை... வேலை.... பொறியியல் பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை

இந்திய கடற்படையில் இலவச பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கான ‘யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம் (யூ.இ.எஸ்.)’, கோர்ஸ் காமென்சிங் -ஜூன்-2020 பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடம் இருந்தும், எக்சிகியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு திருமணமாகாத ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Officers in Executive (University Entry Scheme)

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,10,700

வயது வரம்பு: 02.07.1996 மற்றும் 01.07.1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திலும், இரு தேதிகளில் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தகுதி: எக்சிகியூட்டிவ் பிரிவு பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். டெக்னிக்கல் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மரைன், ஆட்டோமோடிவ்,மெக்கட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி, ஏரோனாட்டிக்கல், ஏரோஸ்பேஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

உடல்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். 

பார்வைத்திறன்: எக்சிகியூட்டிவ் பணிக்கு பார்வைத்திறன் 6/12 என்ற அளவுக்குள்ளும், டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) மூலம் நடத்தப்படும். நிலை-1, நிலை-2 என இரு நிலை எழுத்துத் தேர்வு, நுண்ணறிவுத் தேர்வு, படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடுதல், உளவியல் தேர்வு, குழு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவ தேர்வுக்குப் பின்னர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமனம் அளிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.06.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com