சுடச்சுட

  

  ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு!

  Published on : 27th June 2019 01:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tnpsc

   

  தமிழக அரசின் தடய அறிவியல் துறையில் நிரப்பப்பட உள்ள 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  மொத்த காலியிடங்கள்: 64

  பணி: Junior Scientific Officer
  துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
  1. Chemistry - 40
  2. Biology - 14
  3. Physics  - 06
  4. Physics and Chemistry (Division:Computer Forensic Science) - 04

  சம்பளம்: மாதம் ரூ.36,900 -1,16,600 

  வயதுவரம்பு: 01.07.2019 அடிப்படையில் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

  தகுதி: தடய அறிவிய்ல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது விண்ணப்பிக்கும் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். 

  விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150. விண்ணப்பக் கட்டணம் ரூ.100. ஒரு முறை பதிவிக் கட்டணம் செலுத்தி பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. 

  விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_20_notyfn_JSO.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.07.2019

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai