ஏர் இந்தியா நிறுவனத்தில் செக்யூரிட்டி ஏஜென்ட் வேலை

ஏர் இந்தியா நிறுவனத்தில் செக்யூரிட்டி ஏஜென்ட் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
ஏர் இந்தியா நிறுவனத்தில் செக்யூரிட்டி ஏஜென்ட் வேலை


ஏர் இந்தியா நிறுவனத்தில் செக்யூரிட்டி ஏஜென்ட் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Security Agent

காலியிடங்கள்: 68

சம்பளம்: மாதம் ரூ.18,360

வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: Physical Endurance Test மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஏர் இந்தியா லிமிடெட் என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
General Manager-Personnel, Air India Limited, Airlines House, St.Thomas Mount Post Office, Meenambakkam, Chennai - 600 016.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.03.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com